ஜனவரி 1 முதல் அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கு வட்டி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அஞ்சலக சேமிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றுக்கு ஜனவரி 1 முதல் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட உள்ளன. தற்போது வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில் இருந்து 1.1 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலக சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் வங்கிகள் அனைத்தும் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை உயர்த்திய நிலையில் தற்போது அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கு வட்டி உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான அஞ்சலக திட்டங்களுக்கு உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் குறித்த தகவல்கள் இதோ:
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் தற்போதுள்ள வட்டி விகிதம் 7.6 சதவீதம் என இருந்து வரும் நிலையில் ஜனவரி 1 முதல் அது 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி) திட்டத்துக்கான வட்டி விகிதமானது 6.8 சதவிகிதம் வட்டி விகிதத்தில் இருந்து 7 சதவீத வட்டி விகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
