விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தாரா? திட்டினாரா? பார்த்திபனின் டுவிட்டால் ரசிகர்கள் குழப்பம்

By Bala Siva

Published:

நடிகர் விஜய் திரையுலகிற்கு அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து 30வது ஆண்டு திரைஉலக நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு வெளியானது. விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு அவர் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தாலும் ஹீரோவாக நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு என்பதால் இந்த படம் வெளியான தேதியில் இருந்து அவர் திரையுலகில் அறிமுகமானதாக பார்க்கப்படுகிறது.

parthibanஇந்த நிலையில் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 30 ஆண்டுகளில் அவர் இதுவரை 65 படங்கள் நடித்துள்ளார் என்பதும் 66வது படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 65 படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றி என்பதும் ஒரு சில படங்கள் மட்டுமே தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மூப்பது முட்டாத முப்பது-இனி தோற்பது கிட்டாத ரசிகர்களின் தோப்பது! நண்பர் தளபதி விஜய் அவர்களின் இன்னும் முப்பதும் கடக்கும் இன்னொரு வாரிசே இல்லாத இமாலய வெற்றிக்கு வாழ்த்துகள்!’

இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் விஜய்யை இவர் உண்மையில் வாழ்த்துகிறாரா? அல்லது திட்டுகிறாரா? என்று டுவிட்டரில் உள்ள வார்த்தைகளை புரியாமல் குழப்பமடைந்துள்ளனர்.