நாகர்கோவில் ஸ்பெஷல் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு- சுட்ட அப்பளம்.. இனி நம்ம வீட்டுலயும் செய்து சாப்பிடலாமா!

By Velmurugan

Published:

கூட்டாஞ்சோறு சொன்னாலே வாயில் எச்சிதான் ஊரும் அந்த அளவிற்கு சுவையான சத்தான உணவு தான் கூட்டாஞ்சோறு. நாகர்கோவில் ஸ்பெஷல் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு நம்ம வீட்டுல செய்து சாப்பிடலாம்..

தேவையான பொருட்கள்

பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ,

சின்ன வெங்காயம் – 10,

தக்காளி – 2,

பூண்டு – 10 பற்கள்,

புளிக்கரைசல் – ஒரு ,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

தனியாத்தூள்- ஒரு தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்,

சாதம் – ஒரு கப்,

உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு,

நெய் – ஒரு டீஸ்பூன்.

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் .:

உளுந்து – கால் தேக்கரண்டி ,

காய்ந்த மிளகாய் – 2,

மிளகு, சீரகம் – கால் தேக்கரண்டி ,

வேர்க்கடலை – கைப்பிடி அளவு.

தாளிக்க.:

கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், வெந்தயம் – கால் தேக்கரண்டி ,

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

நல்லெண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை.:
முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்

இது பாதி வெந்தும் அதில் கத்திரிக்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும், பின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) சேர்த்துக் கொள்ளவும்

பின்பு அதனுடன் உப்பு, புளிக்கரைசல் விட்டு சிறிது நேரம் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் அதன் [பின் தேவையான அளவு நீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.

பசியே இல்லாமல் வயிறு மந்தமா இருக்குதா? நல்ல சாப்பிடனுமா … உணவோடு இஞ்சி ஊறுகாய் சாப்பிடுங்க..

இதில் வேகவைத்த சாதம் சேர்த்து அதன்மீது வறுத்துபொடித்த பொடியைத் துாவி ஒரு தேக்கரண்டி நெய்விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால், மணம் வீசும் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு தயார். அதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும்பலமாக இருக்கும்.