பசியே இல்லாமல் வயிறு மந்தமா இருக்குதா? நல்ல சாப்பிடனுமா … உணவோடு இஞ்சி ஊறுகாய் சாப்பிடுங்க..

நல்லா பசித்து நம் உணவு சாப்பிடும் பொழுது எந்த நோயும் நம்மை தீண்டாது. பசி இல்லாமல் நம் சாப்பிடும் உணவு நம்மை மந்தமடைய வைக்கும். உடலின் சுறுசுறுப்பை கெடுத்து விடும், நோய் தொற்றுக்கு வழி வகுக்கும்.

நாம் உண்ணும் உணவு நன்கு செரிமானம் அடையும் போது தான் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் முழுமையாக கிடைக்கும். செரிமானத்து சிறந்தது இஞ்சி , அதை வைத்து ஊறுகாய் செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்.:

இஞ்சி – கால் கிலோ,

புளி – எலுமிச்சை பழ அளவு ,

பச்சை மிளகாய் – ஒன்று,

வெல்லம் – அரை கப்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

கடுகு – அரை தேக்கரண்டி

பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி

நல்லெண்ணெய் – தேவையான அளவு ,

உப்பு – சுவைக்கு ஏற்ப .

செய்முறை.:

முதலில் புளியை 1 மணி நேரத்திற்கு முன்னாலே ஊறவைத்து கொள்ள வேண்டும், அதை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்த, கடுகு, பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனுடன் கீறிய பச்சை மிளகாயைப் போட்டு, நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

புரோட்டின் சத்து நிறைந்த ரசம் சாப்பிடணுமா? பருப்பு ரசம் செய்யலாம் வாங்க!

பிறகு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது வெல்லத்தை சேர்த்துக் கிளறி விடவும் , ஆறவிட்டு எடுத்து பயன்படுத்தலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.