எதிரிகள் இருக்கணும்… ஆனா… அவர்களோட செயல் பாதிக்கக்கூடாது…. வளர்ந்துக்கிட்டே இருக்கணும்… எந்த கடவுளைக் கும்பிடலாம்?

By Sankar Velu

Published:

எதிரிகள் தான் நம் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள். அதனால் அவர்களை நாம் எதிரியாக நினைக்கக்கூடாது. அவரை ஒரு போட்டியாளராக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பொறாமை உணர்ச்சி வந்துவிடக்கூடாது.

நம் வளர்ச்சி பிடிக்காமல் நம்மைக் கீழ்நிலைக்கு இழுத்துக் கொண்டு வரணும்னு வேலை செய்றவங்க எதிரிகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தனது எதிரியைத் தெரிந்து வைத்துக் கொள்ள முடியாமல் இருப்பதே பெரிய தவறு.

Arakkan
Arakkan

எதிரிகள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நமக்கு எதிரி யார்? அந்த எதிரியின் பலன் என்ன? அந்த எதிரியை வீழ்த்துவது எப்படி என்று தான் நாம் சிந்திக்க வேண்டும்.

அவர் நல்லா இருக்கக்கூடாது என்று நினைப்பதோ…செய்வினைகள் வைப்பதோ கூடாது. அதற்குப் பதிலாக அவரை விட நம்ம நல்லா உழைத்து ஒரு படி முன்னேற வேண்டும் என்று தான் நம் எண்ணம் இருக்க வேண்டும்.

அவங்க நம்மைப் பற்றி இப்படிப் பேசுறாங்களேன்னு பயந்து ஒதுங்கிப் போயிடவும் கூடாது. அப்படிப் பின்வாங்க வேண்டிய அவசியமும் இல்லை.

எதிரிங்க தொல்லை

எதிரிங்க தொல்லை தாங்க முடியல…மன உளைச்சல்…செயல்களிலும் கஷ்டப்படுத்துறாங்க…தவறாகப் பேசுறாங்க…அப்படின்னு தவிப்பவர்கள் அவங்கக்கிட்ட இருந்து எப்படி சமாளித்து வெளிய வர்றதுன்னு இங்கே பார்க்கலாம்.

எதிரிகளுக்கு நாம் கொடுக்கிற பெரிய பரிசு என்ன தெரியுமா? அவங்க செய்ற செயலை நாம் எதையும் கண்டுக்காமல் நம்முடைய செயலின் தரத்தை உயர்த்திக் கொண்டே போறது தான். ஒரு புன்னகை போதும். அதை விட பெரிய விஷயம் எதுவுமில்லை.

ஒருவன் நமக்குக் கெட்டது செய்யும்போது அதைக் கண்டுக்காமல் நாம் அவனுக்கு நல்லது செய்ய வேண்டிய நேரம் வந்தால் அதை செய்து விட்டுப் போய்விட வேண்டும். இதைத் தான் வள்ளுவர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்

என்ற குறளில் சொல்லியிருப்பார்.

அப்படி நல்லது செய்யும்போது அவன் அப்படியே கூனி குறுகிப் போயிடுவான். அதை விட எதிரிகளுக்கு நாம் பெரிய தண்டனையைக் கொடுக்க முடியாது. எதிரிகளை நாம் கண்டுக்கவே இல்லை. ஆனால் அவர்கள் செய்வினை செய்வது, அமானுஷ்ய சக்தியைப் பயன்படுத்தி வீழ்த்துவது என சதியில் ஈடுபட்டால் அவற்றிலிருந்து நாம் மீள்வது எப்படி? அதற்கு எந்தக் கடவுளை வழிபட வேண்டும்?

கந்தக்கடவுள்

Lord Muruga 1
Lord Muruga

கந்தக்கடவுள் முருகனை வழிபட்டால் போதும். எதிரிகளை மற்ற எல்லாக் கடவுள்களும் அழிச்சாங்க. ஆனால், முருகர் மட்டும் எதிரியைப் பக்கத்திலேயே வச்சிக்கிட்டாரு. கிருபானந்த வாரியாரும் அழகாக சொல்வார். பாம்பு இருக்கணும்.

ஆனா கடிச்சா விஷம் ஏறக்கூடாது. பாகற்காய் இருக்கணும். ஆனால் சாப்பிட்டால் கசக்கக்கூடாது. அதெப்படின்னா சமைக்கத் தெரிந்த பெண்கள் சாப்பிடுவதற்கு ஏற்ப சமைத்தால் பாகற்காய் கசக்காது. அதே போல தான் பாம்பாட்டி வைத்துள்ள பாம்பு கொத்துனாலும் விஷம் ஏறாது.

அதே மாதிரி தான் பகைவன் இருக்க வேண்டும். ஆனால் அவன் காட்டும் பூச்சாண்டி வேலைகள் நம்மக் கிட்ட பலிக்காது.

முருகப்பெருமானும் சூரபத்மனைக் கொன்று விட்டுப் போயிருக்கலாம். ஆனால் அவர் கொல்லவில்லை. சம்ஹாரம் தான் செய்தார். சம்ஹாரம் என்றாலும் கொல்வது தானே என்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல. சம் என்றால் நல்ல. ஹாரம் என்றால் ஒடுக்குதல்.

Soora samharam
Soora samharam

சம்ஹாரம் என்றால் நன்றாக ஒடுக்குதல். அதாவது சூரபத்மனை சம்ஹாரம் பண்ணி சேவலாகவும், மயிலாகவும் தன் பக்கத்திலேயே வச்சிருக்கார். இன்றும் நாம் சூரபத்மனோடு சேர்த்துத் தான் முருகரையும் வணங்குகிறோம். சேவலும் மயிலும் போற்றி. திருக்கை வேல் போற்றி போற்றியே என்கிறோம்.

அப்படி என்றால் எதிரியையே வணங்க வைத்த தெய்வம் யாருன்னா அது கந்தக்கடவுள் தான். அவர் முன்னால் எந்த எதிரிகளுக்கும் வேலை இல்லை. சத்ருநாசம் செய்பவர். அதாவது சத்ருசம்ஹாரம் செய்வார் முருகப்பெருமான்.

பகைவனின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவன் கந்தன் என்று சொல்வார்கள். அதனால் பகைவனின் செயலை சமாளிக்க நாம் வழிபட வேண்டிய தெய்வம் முருகப்பெருமான் தான். என்ன எந்திரம், என்ன மந்திரம் வச்சாலும், என்ன பூஜை பண்ணினாலும் முருகப்பெருமானை இறுகப் பற்றிக் கொண்டவர்களுக்கு அவற்றால் ஒருபோதும் கெடுதல் நேருவதில்லை.

பகைவனின் தொல்லைக்கு பாம்பன் சுவாமிகள் அருளிய பகைக்கடிதல் அருமையான தோத்திரம். இதை அன்றாடம் பாராயணம் பண்ணலாம். நமக்கு தெரிந்த எதிரிகளும் இருக்காங்க. தெரியாத எதிரிகளும் இருக்காங்க. அவங்கக்கிட்ட இருந்து நாம சமாளிக்கறதுக்குத் தான் இந்த தோத்திரம்.

செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பித்துப் பாராயணம் செய்யலாம்.

பகைக்கடிதல்

திருவளர் சுடருருவவ சிவவகரம் அமருருவவ
அருமவை புகழுருவவ அைவர்கள் ததொழுமுருவவ
இருள்தபும் ஒளியுருவவ எனநிவன எனதததிவர
குருகுகன் முதன்மயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (1)

மவைபுகழ் இவைமுனவர மவைமுதல் பகருருவவ
தபொவைமேி யுேகுருவவ புனநவட தருமுருவவ
இவையிள முக உருவவ எனநிவன எனதததிவர
குவைவறு திருமயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (2)

இதரர்கள் பேர்தபொரவவ இவணுவை எனதததிவர
மதிரவி பே தவன வதர் வளர் சரணிவட எனமொ
சதுதரொடு வருமயிவே தடவவர யவசவுைவவ
குதிதரு தமொரு மயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (3)

பவநவட மனுடர்முவன படருறும் எனதததிவர
நவமணி நுதல் அணிவயர் நவகபே மிடர் அணிமொல்
சிவணிய திருமயிவே திடதனொடு தநொடிவேவம
குவேயம் வருமயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (4)

அழகுறு மேர் முகவன அமரர்கள்பணி குகவன
மழவுறு உவடயவவன மதிநநி தபரியவவன
இழவிேர் இவையவவன எனநிவன எனதததிவர
குழகதுமிளிர் மயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (5)

இவணயறும் அறுமுகவன இதசசி மருமகவன
இணரணி புரள்புயவன எனநிவன எனதததிவர
கணபண வரவுரவம கவேவுை எழுதருவமொர்
குணமுறு மணிமயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (6)

எளிய என் இவைவ குகொ எனநிவன எனதததிவர
தவளிநிகழ் திரள்கவளமீன் மிளிர்சிவனதயன மிவடவொன்
பளபள எனமினுமொ பேசிவை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (7)

இேகயில் மயில்முருகொ எனநிவன எனதததிவர
பேபே களமணிவய பேபே பதமணிவய
கேகே கே எனமொ கவிதனொடுவருமயிவே
குேவிடுசிவகமயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (8)

இகேறு சிவகுமரொ எனநிவன எனதததிவர
சுகமுனிவரர் எழிேொர் சுரர்பேர் புகழ் தசயவவ
ததொகுததொகு ததொகு எனவவ சுரநட மிடுமயிவே
குகபதி அமர் மயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (9)

கருவணதபய் கனமுகிவே கடமுனி பணிமுதவே
அருண் அயன் அரன் எனவவ அகநிவன எனதததிவர
மருமேர் அணிபேவவ மருவிடு களமயிவே
குருபே வவிர்மயிவே தகொணர்தியுன் இவைவவனவய. (10)

– பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்