கடன் தொல்லை, திருமணத் தடை அகல எந்தத் திசை நோக்கி விளக்கேற்ற வேண்டும்?

By Sankar Velu

Published:

ஒருவருக்கு வாழ்க்கையில் மிகவும் மனக்கஷ்டத்தைத் தரக்கூடிய விஷயம் ஒன்று உண்டென்றால் அது கடன் தொல்லை தான். கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் படும்பாடு அவர்களுக்குத் தான் தெரியும். அதே போல மணமாகாமல் பலர் 40 வயதைக் கடந்தவர்களாக இருப்பதைப் பார்த்திருப்போம்.

அவர்களுக்கு எந்தக் குறையுமே இருக்காது. ஆனால் திருமணத்தடை வந்தவண்ணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த இரண்டு தடைகளுமே அகல வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஆன்மிகம் தான். இங்கு தான் இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பல வழிகள் உள்ளன.

Agal vilakku 3
Agal vilakku

அவற்றில் ஒன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள். இந்த நன்னாளில் நாம் மனமுருகி சிவனை வேண்டிக்கொண்டு வீடுகளில் விளக்கேற்றுகையில் நாம் நினைத்தது நிச்சயம் நடக்கும்.

ஜோதி சொரூபமானவன்

தீபத்திருநாள் கார்த்திகை மாதத்தில் வீடு தோறும் இரவு வாசலில் விளக்கேற்றுவதுண்டு. சிவன் ஜோதி சொரூபமானவன் என்பதைக் குறிக்கவே இப்படி விளக்கேற்றுவர். திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றுவர்.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பர். அது அக்னி தலம். சித்தர்களும், யோகிகளும் அதிகமாக அங்கு சென்று வந்துள்ளனர்.

வீடு தோறும் விளக்கேற்றுங்கள்…

இந்த ஆண்டு உலகம் முழுவதும் டிசம்பர் 6 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
ஓணம், தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று அனைத்து மக்களும் கொண்டாடும் திருநாள் தான் தீபத்திருநாள். இந்த நாளில் மக்கள் அனைவரும் வீடு எங்கும் விளக்கு ஏற்றி ஜோதி ரூபமாக சிவனை வழிபடுவது வழக்கம்.

டிசம்பர் 6 அன்று வரும் கார்த்திகை தீபத்திருநாள் சிறப்பு வாய்ந்தது. இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதுதான் திருவண்ணாமலை தீபம். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

தீபத்திருநாள்

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் இந்த தீபம் ஏற்றப்படும். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

Deepam2
Deepam2

இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 20ஆம் தேதியிலும், ஆங்கிலம் மாதத்தில் டிசம்பர் 6ஆம் தேதியும் கொண்டாடப்படவுள்ளது. இந்த திருவிழா திருவண்ணாமலையில் நவ.27 (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

டிசம்பர் 6ஆம் தேதி அன்று காலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

கடன் தொல்லை நீங்க…

இந்த தீபம் தொடர்ந்து 7 நாட்கள் எரிந்து கொண்டிருக்கும். தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.

மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றினால் துன்பங்கள் அண்டும்.

நினைத்த காரியங்கள் நிறைவேற…

ஒரு முகம் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், இரு முகம் ஏற்றினால் குடும்பங்களில் நன்மை உண்டாகும், 3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும், 4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். 5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.

deepam 1
deepam

குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த 27 எண், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. 27 வைக்கமுடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும்.

இது தவிர வீடு முழுவதும் மெழுகுவர்த்தியும் ஏற்றி அலங்காரம் செய்வார்கள். சிவன் கோவில்களில் அக்னி சொரூபமான சிவனை குறிப்பிடும் வகையில் சொக்கப்பனைக் கொளுத்துவர்.