ஒவ்வொரு ஊரு சமையலுக்கும் தனி சுவை உண்டு. இந்த வகையில் திருநெல்வேலி அப்படினு பார்த்தால் அவர்களது சமையல் முறை மிகவும் வித்தியாசமானது மகத்துவமானது. காரசாரமான அந்த ருசிக்கு அனைவருமே அடிமைனு தான் சொல்லணும். திருநெல்வேலி அல்ல்வாக்கு மட்டும் இல்லக்கா அவியலிக்கும் ஸ்பெஷல் தான், அப்படி கல்யாண வீடுகளில் பிரிமாறப்படும் அவியல் நம்ம வீடுகளில் ட்ரை பண்ணி பாக்கலாமா.. ரெசிபி இதோ..
தேவையான பொருட்கள்
வெள்ளை பூசணிக்காய் – 200 கிராம்
சவ்சவ் – 1 ,
சேனை – 200 கிராம் ,
வாழை – 1,
பீன்ஸ், கேரட் – தலா 200 கிராம் ,
உருளை – 1
பரங்கிக்காய் – 100 கிராம் ,
புடலங்காய் – 1,
முருங்கை – 2
கத்திரிக்காய் – 200 கிராம்
மாங்காய் – 4,5 துண்டுகள்
சிறுக்கிழங்கு – 200 கிராம்
சேப்பங்கிழங்கு – 200 கிராம்
அவரைக்காய் – 200 கிராம்
இப்படி எல்லா காய்கறிகளை சேர்த்து தான் அவியல் தாயார் செய்ய வேண்டும், கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை சற்று நீளமாக நறுக்கி கொள்ளவும் .
அரைக்க வேண்டிய பொருட்கள் :
தேங்காய் 1(துருவிக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 6
வாசமான கெட்டித் தயிர் – 1டம்ளர்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தேங்காய் எண்ணெய் – கொஞ்சம்
வெள்ளை பூண்டு – 10 பல்
சீரகம் – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் காய்கள் அனைத்தையும் நன்கு கழுவி நிளமாக நறுக்கி கொள்ளவும் , அதனுடன் சிறுது மஞ்சள் தூள் சேர்த்து காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வேகவிடவும்.
காய் குழைவாக வேக கூடாது, பாதி வெந்ததும் நீரை வடி கெட்டி கொள்ளவும், அதனுடன் முதல் கொடுக்கப்பட்டுள்ள பச்சை மிளகாவை நன்கு மையாக அரைத்து கொள்ளவும். அதை வேக வைத்த காய்களுடன் சேர்த்து கொள்ளவும்.
நன்கு கொதிக்க விடவும் காரம் காய்களில் பிடிக்கும் வரை கொதிக்க விடவும் , அந்த நேரத்தில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதை பின் தேங்காய் , சீரகம் ,பூண்டு சேர்த்து மையாக மிக்சியில் அரைத்து கொண்டு அதை சேர்த்து கொள்ளவும், அந்த பாத்திரத்தை மூடி போட்டு முடி 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
குளிர்காலத்தில் தயிர் புளிக்க வில்லையா? சீக்கிரம் புளிக்க – 7 எளிய குறிப்புகள் இதோ…
பின்பு அதனுடன் கெட்டி தயிர் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும். இப்போது சுவையான அவியல் தயார், இதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை கொண்டு தாளித்தால் சுவை மேலும் சேரப்பாக இருக்கும்.