நமது உடலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நவதானியத்தில் உள்ளது. அதை வைத்து சத்தான கட்லெட் செய்யலாமா..
தேவையான பொருட்கள்:
முளைவிட்ட நவதானியக் கலவை – ஒரு கப்
வேகவைத்த வேர்க்கடலை – 50 கிராம்
மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
சோள மாவு – 1 தேக்கரண்டி
பிரெட் கிரம்ஸ் – கால் கப்
புதினா, கொத்தமல்லித்தழை – கையளவு
சோம்பு – கால் 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவைக்கு ஏற்ப .
ஹோட்டல் ஸ்டைல் மணமணக்கும் கடாய் மஷ்ரூம் சாப்பிடணுமா? இதோ பாருங்க..
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு அதில் சோம்பு , வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும் , அதனுயுடன் நவதானியக் கலவையைச் சேர்த்து பாதி வேகும் வரை நன்கு வதக்கவும்.
அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து வதக்கி, இறுதியாகவும் கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கவும்.
கறிக்குழம்புடன் போட்டி போடும் மணமணக்கும் ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா!