நவராத்திரியின் 9ம் நாளில் தான் சரஸ்வதி பூஜை வருகிறது. இதை ஆயுத பூஜையாகவும் கொண்டாடுகின் றோம்.
இந்த 9 நாள்களிலும் அம்பிகையை நவதுர்க்கையாக நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு ரூபத்தை எடுப்பதைப் பற்றி நாம் பார்த்துள்ளோம். 8ம் நாள் மகாகௌரியாக தூய்மையின் பிம்பமாக நமக்கு அருள்புரிகிறாள்.
9ம் நாளில் சித்திதாத்ரி என்ற பெயரில் அம்பிகையாக வந்து நமக்கு அருள்புரிகிறாள்.
நம் வாழ்க்கையிலும் இதே போல் பிரயாணம் செய்தால் அனைத்து சக்திகளையும் பெற்று நவதுர்க்கையைப் போல அஷ்டமாசித்திகளையும் பெற முடியும்.
அர்த்தநாரீஸ்வரருடன் இணைந்த ரூபத்தையும் அம்பிகையின் இந்த கோலம் நமக்கு உணர்த்துகிறது. இந்த நாளில் அம்பிகைக்கு பரமேஸ்வரி. நவதுர்க்கையில் சித்திதாத்ரி.
தாமரை, மரிக்கொழுந்து மலர்களால் அர்ச்சிக்கலாம். சர்க்கரை, நாவல் பழம், கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியமாக வைத்து வழிபடலாம். வசந்தா ராகத்தில் பாடல் பாடி வெந்தய நிறத்தில் உடை அணிந்து வழிபட வேண்டும்.
இந்த அம்பிகையை வழிபடுவதன் மூலம் நிறைவு நாளில் மனநிறைவை அம்பாள் தருகிறாள். அனைத்து சித்திகளையும் தருகிறாள். மனிதர்கள் மட்டுமல்லாது யட்சகர்கள், கிங்கணர்கள் என எல்லோரும் வணங்கக்கூடிய தேவியாக இருக்கிறாள் இந்த சித்திதாத்ரி.
நாம் எதை ஆயுதமாகப் பயன்படுத்தி நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறோமோ அந்தப் பொருள்களுக்கு நாம் மரியாதைத் தரக்கூடிய நாள் தான் இந்த ஆயுத பூஜை. எல்லோரும் எதையாவது ஒன்றை வைத்துத் தான் நம் வாழ்வாதாரத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
புத்தகங்கள், ஆட்டோ, சைக்கிள், பைக், கத்தி, சலங்கை, வாத்தியக்கருவிகள், சுத்தியல், ஸ்பேனர், டிரில்லிங் மெஷின் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யலாம். குழந்தைகள் பள்ளிப்புத்தகங்கள், பேனா, நோட்டு, புத்தகங்களை வைத்து வழிபடலாம். அன்றே எடுத்தும் படிக்கலாம்.
தேங்காய், வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, அவல், பொரி, சுண்டல், கடலை என நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.
காலை 10.35 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.50 மணிக்கு மேல் இரவு வரை வழிபாடு செய்யலாம்.
சரஸ்வதி பூஜை அன்றும் விஜயதசமி அன்றும் வித்யாரம்பம் செய்து கொள்ளலாம்.
காலை 6 மணிக்கு மேல் 8.45 மணி வரை வித்யாரம்பம் செய்து கொள்ளலாம். காலை 10.30 மணி முதல் வித்யாரம்பத்தை வைத்துக் கொள்ளலாம். பொதுவாக காலையில் வித்யாரம்பத்தைப் பண்ணுவது தான் நல்லது.
மூத்தோர் கையால் குழந்தைகளுக்கு வித்யாரம்பத்தை ஆரம்பிக்கலாம். நெல், அரிசியைப் பயன்படுத்தி தாம்பூலத்தில் வைத்து அ என்று குழந்தைகளின் கைகளைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுக்கலாம்.
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்.