நவராத்திரி 8ம் நாளில் சரஸ்வதி தேவியை வழிபடக்கூடிய 2ம் நாள். இன்று வழிபடும் அம்பிகையின் பெயர் நரசிம்மதாரிணி. சிம்ம முகத்தைக் கொண்ட தெய்வம். சிம்ம முகத்தைக் கொண்ட கடவுள் நரசிம்மர். இது அம்பிகையாதலால் நரசிம்மி. நரசிம்மருக்குள்ள கோபம், உக்கிரம், ஆக்ரோஷம் எல்லாம் அம்பிகைக்கும் வரும்.
தன்னுடைய பக்தர்களுக்கு யாராவது ஒரு துன்பம் கொடுத்தாலோ அல்லது செய்ய நினைத்தாலோ அவர்களை மட்டுமல்ல…அவர்களைச் சார்ந்த அத்தனை பேர்களையும் அழிக்கக்கூடிய தெய்வமாக விளங்குபவள். அதனால் தான் இந்தத் தெய்வத்திற்கு பெயர் நரசிம்மதாரிணி.
அம்பிகையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலம் இருக்குது. நவராத்திரியின் கடைசி நாள்கள் ரொம்பவே முக்கியமானது.
ரோஜா, மருதாணி மலர்களால் அர்ச்சிக்கலாம். பால்சாதம், மொச்சைப்பயறு சுண்டல், திராட்சை ஆகியவற்றை நைவேத்தியமாக வைத்து பூஜிக்கலாம். புன்னாகவராளி ராகத்தில் பாடலைப் பாடி பச்சை அல்லது அரக்குந நிறத்தில் உடை அணிந்து வழிபடலாம்.
பொதுவாகவே கொலு வைத்துள்ளவர்கள் காலையும், மாலையும் பூஜை பண்ணனும். காலையில் பழங்கள், உலர்ந்த திராட்சை வகைகளைக் கொண்டு நைவேத்தியம் பண்ணிக்கலாம். மாலையில் பொங்கல், புளியோதரை, சுண்டல் இந்த மாதிரி நைவேத்தியம் வைக்கலாம். கொலு வைக்காதவர்கள் மாலை நேரத்தில் மட்டும் பூஜை செய்யலாம். மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்வது நலம்.
இஷ்ட சித்திகளும் உண்டாகும். பயம் நம்மை விட்டு நீங்கும். பயம் இல்லை என்றாலே எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் செய்து முடித்து விடலாம். இந்த நரசிம்மியோட சிறப்பு சித்திகளுக்கு உரிய தேவி. அஷ்டமாசித்திகளையும், யார் யார் என்னென்ன சித்திகளை வேண்டுகிறார்களோ அந்த சித்துகளை சாத்தியக்கூறுகளாக மாற்றித்தருகின்ற ரூபமாகவும் இந்த அம்பிகை நமக்குக் காட்சி தருகின்றாள்.
கொலு வைக்கிறவர்களுக்கு இந்த பலன்கள் எல்லாம் உண்டு. கொலு வைக்கவில்லை என்றாலும் சரஸ்வதி தேவியின் திருவுருவப் படமோ அல்லது நம்ம வீட்டுல இருக்குற அம்பிகையோட திருவுருவப்படத்துக்கோ நைவேத்தியம் பண்ணி வழிபாடு பண்ணினாலும் இந்தப்பலனை நாம் பெறலாம்.
பொதுவாக ஒரு பெண்ணின் அங்க அடையாளங்களை வைத்து அவரது குணநலன்களைக் கண்டுபிடித்துவிடலாம். சாமுத்ரிகா லட்சணம் பார்க்கத் தெரிஞ்சவங்க ஒரு பொண்ணப் பார்த்த உடனே இந்தப் பொண்ணோட குணம் இப்படித் தான் இருக்கும்னு கண்டுபிடிச்சிடுவாங்க. இந்தப் பொண்ணோட பேச்சு இப்படித் தான் இருக்கும். இவளோட வாழ்க்கையே இப்படித் தான் இருக்கும்னு கண்டுபிடிச்சிடுவாங்க.
பெண்கள் ஒற்றைக்காலில் நிற்கலாமா?
இப்போ சமையல், பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என எல்லா வேலைகளையும் நின்று கொண்டே செய்கிறோம். அந்தக்காலத்தில் சவுகரியமாக உட்கார்ந்துக்கிட்டு செஞ்சாங்;க. நின்னு நின்னு பழகி கால்ல ஒரு வலி ஏற்படுது.
அந்த வலியைப் போக்கணும்கறதுக்காக நிறைய பேருக்கு ஒத்தக்கால்ல நிக்கிற பழக்கம் உண்டாகுது. அல்லது ஒரு கால தூக்கி இன்னொரு கால் மேல வச்சிக்கிட்டு ஒரே கால்ல நிப்பாங்க. பொதுவாக பெண்களும் சரி. ஆண்களும் சரி. வீட்ல ஒத்தக்கால்ல நிக்கக்கூடாது.
இது பிடிவாதக்குணத்தை உண்டாக்கும். அதனால் தான் அப்படி நிக்கக்கூடாது என்கிறார்கள். அறிவியல் ரீதியான காரணங்கள் என்னவென்றால் இப்படி நிற்பதால் சீக்கிரத்திலேயே இடுப்பு எலும்பைப் பாதித்து பலமில்லாமல் ஆக்குகிறது. கை, கால், இடுப்புப்பகுதியில் வலி உண்டாகிறது. இது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.