இந்தியாவில் தசராவை மைசூரில் சிறப்பாகக் கொண்டாடுவர். மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லைங்கற கர்வத்துல அவன் மகேந்திரகிரிபர்வதம் பகுதியில நினைச்சபடி ஆட்சிபுரிந்து வந்தான்.
அந்தப்பகுதி தான் தற்போது மைசூர் என்றானது. மகிஷன் ஆண்ட ஊர் என்பதால் மகிஷாவூர் என்றது மருவி மைசூர் ஆனது. இதனால் தான் மைசூரில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி சாமுண்டீஸ்வரி கோவிலில் தசராவை சிறப்பாகக் கொண்டாடுவர்.
மைசூர் மகிஷாசுரன் ஆட்சி செய்த ஊர். அங்கு தான் அவனை அம்மன் வதம் செய்தார். அதனால அங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குலசையில் ஏன் தசராவைக் கொண்டாடுகிறார்கள்? நமக்குத் தான் தசரா கொண்டாடும் பழக்கம் இல்லையே என்ற கேள்வி எழலாம்.
மைசூரை ஆட்சி செய்த மன்னருக்கும், குலசையில் ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியனுக்கும் ஒரு நல்ல நட்புறவு இருந்து வந்தது. அம்பாளோட அதிசயங்களைக் கேட்டு புல்லரிச்சுப் போன பாண்டியன் அம்பாளோட தீவிர பக்தன் ஆனார்.
அம்பாள் தென்மறைநாடுல குலசேகரப் பாண்டிய மன்னனுக்குக் காட்சிக் கொடுத்து ஆசி வழங்கியதால் முத்தாரம்மனுக்குத் தசரா திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்த அம்மனோட சக்தியைத் தெரிந்து கொண்ட மக்கள் வெளிநாடுகளில் இருந்தும் கூட வந்து அம்மனின் அருளைப் பெற்றுச் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
அதனால் தான் தசரா கொண்டாட்டத்தின் போது 10வது நாள் இரவு 12 மணிக்கு மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அப்போது குலசேகரப்பட்டினம் கடற்கரையில் திரண்டு இருக்கும் சுமார் 10 லட்சம் நபர்களில் பாதி பேர் காளி வேடமணிந்து ஆக்ரோஷமாக நடனமாடி வருவாங்க.
அந்தக்காட்சியை மேலிருந்து பார்த்தால் அம்மனே பல வேடங்கள் எடுத்து பூமிக்கு வந்த மாதிரி இருக்கும். இது ஒரு கண்கொள்ளாக் காட்சி என்றால் மிகையில்லை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தசரா திருவிழா வரும் அக்.5ம் நாள் கொண்டாடப்படுகிறது.