முதல் 3 நாள்கள் துர்க்கையை வழிபடுகிறோம். தொடர்ந்து நவராத்திரி 4ம் நாளில் இன்று (29.9.2022) மகாலெட்சுமியை ஆவாகனம் செய்து வழிபட வேண்டிய முதல் நாள். நவராத்திரி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற 3 சக்திகளையும் இணைத்து வழிபட வேண்டிய நாள். வேண்டிய வரங்களை வேண்டிய வண்ணம் விரதம் இருந்து பெறக்கூடிய உன்னதமான நாள் தான் இந்த நவராத்திரி.
பொதுவாக நவராத்திரி 4ம் நாள் மகாலெட்சுமிக்கு உரிய நாளாக பிறக்கிறது. பொதுவாக நவராத்திரி வழிபாடு செய்கின்ற போதே மகாலெட்சுமிக்கு உண்டான பூஜைகளை எல்லாம் செய்து இன்றைக்கு கலசம் வைத்திருக்கக்கூடியவர்கள் மகாலெட்சுமியை ஆவாகனம் செய்து வழிபாடு பண்றது முறை.
அகண்ட தீபம் வைத்து வழிபடுபவர்கள் இன்றைய தினம் மகாலெட்சுமி தாயே எங்கள் வீட்டில் இந்த அகண்ட தீபத்தில் எழுந்தருளி அருள்புரியணும்னு பிரார்த்தனை பண்ணிக்கலாம். தனி கலசம் மட்டும் வைத்திருப்பவர்களும் இதே போல மகாலெட்சுமியை பிரார்த்தனை செய்து கொண்டு நம்ம வழிபாட்டைத் துவங்கலாம்.
இப்படி செய்யுற இந்த வழிபாட்டுல நவதுர்க்கையின் வழிபாடு. இன்றைக்கு அம்பாளுடைய திருநாமம் கூஷ்மாண்டா தேவி. கூ என்றால் சிறிய என்று அர்த்தம். குஷ்மா என்றால் வெப்பமயமான என்று பொருள். அண்டா என்றால் உருண்டை வடிவத்தில் உள்ளது என்று பொருள். அதாவது சிறிய வெப்பமயமான உருண்டை வடிவிலான உலகத்தை உருவாக்கியவள் என்று பொருள்.
ஒரு காலத்தில் உலகமே மாயையாகிய கோலமாக இருந்தது. அம்பாளுக்கு ஆதிபராசக்தி என்று பெயர். இவள் தன்னுடைய பல கோடி மடங்கு கருணையில் ஒரு பங்கை அம்பாள் கருணையோட பார்க்கிறாள். அந்தப் பார்வையில் உலகில் உயிர்கள் எல்லாம் வளர ஆரம்பிக்கிறது. அந்த அழகான உலகில் இவள் பூக்கிற புன்னகையில் உலகின் இருள் அகல்கிறது. இவள் சூரியமண்டலத்தையே இயக்குபவள் தான் கூஷ்மாண்டாதேவி.
தேவியின் ரூபம் சிம்மவாகனத்தில் எழுந்தருளி அருள்புரிகிறாள். கையில் வித்தியாசமாக அதிர்ஷ்ட கலசங்களை வைத்திருக்கிறாள். இது நமக்கு நவநிதிகளையும் அஷ்டசித்திகளையும் பெற்றுத் தரும். அனிமா, மகிமா, லகிமா, கரிமான்னு கேள்விப்பட்டு இருப்பீங்க. இவ்வுலக வாழ்க்கையில் நாம் நலம் பெற வேண்டும் என்பதற்காக நவநிதிகளை அதாவது குபேர செல்வத்தைப் நமக்கு வாரி வாரி வழங்குகிறாள். குபேர செல்வத்தை குபேர சம்பத்துக்கள் என்றும் சொல்லலாம்.
இந்த 4ம் நாளில் அம்பிகையை மகாலெட்சுமி என்றும் நவதுர்க்கையில் கூஷ்மாண்டா தேவி என்றும் சொல்வர். ஜாதிமல்லியை வைத்து அர்ச்சனை செய்யலாம். கதம்ப சாதம், பட்டாணி சுண்டல், கொய்யா பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக வைக்கலாம். பைரவி ராகத்தில் பாடி கருநீல நிற உடைகளை அணிந்து வழிபடலாம்.