வருகிறது மகாளய அமாவாசை…நாளை முதல் 15 நாள்கள் இதைக் கட்டாயமாக செய்யுங்க…!!!

By Sankar Velu

Published:

மகாளய பட்சம் என்பது தொடர்ந்து 15 நாட்கள் தர்ப்பணம் கொடுக்கணும். இந்த நாளில் அன்னதானம் செய்தால் மிக மிகச் சிறப்பு. இதை ஆண்மகன் தான் கொடுக்கணும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒருவர் எவ்வளவு கஷ்டப்பட்ட போதிலும் அவர் செய்த தானமானது அதுவும் அன்னதானமானது எந்த வழியிலாவது வந்து காத்தருளும். இதற்கு ஒரு சிறு சம்பவத்தை நம் புராணத்தில் இருந்து பார்ப்போம்.

மாவீரன் கர்ணன் இறந்த பிறகு சொர்க்க லோகத்திற்குப் போகிறார். அங்குதான் அவர் வசிக்கிறார். ஒரு காலத்தில் அவருக்கு நல்லா பசிக்க ஆரம்பிச்சிடுது. அப்;ப சொர்க்கலோகத்துல சாப்பாடு எங்கெங்கு கிடைக்குதுன்னு தேடி அலைவார். எங்குமே சாப்பாடு போட மாட்டார்கள். அப்போ ஒரு முனிவர் வர்றாரு.

என்ன கர்ணா சோர்ந்து போயி உட்கார்ந்துருக்கியேன்னு கேட்குறாரு. அப்போ கர்ணன் சொல்றாரு. எனக்கு ரொம்ப பசிக்குது. எங்கெயுமே சாப்பாடு கிடைக்கலங்கறாரு. எங்க சாப்பாடு போடுறாங்கன்னு முதல்ல சொல்லுங்கன்னு கேட்குறாரு. அதற்கு முனிவர் சிரிக்கிறார். இங்கு சாப்பாடு கூடமே இல்லையே.

Annathanam 2
AnnathanamWhat

அப்படி ஒரு இடமே இல்லையேன்னு சொல்வாரு. என்ன சொல்றீங்க முனிவரே…சாப்பாடே கிடைக்காதா..ங்கறாரு கர்ணன். சொர்க்கத்துல வாழ்ற ஆத்மாக்களுக்கு பசிக்கவே பசிக்காது கர்ணா. உனக்கு மட்டும் எப்படி பசி எடுத்ததுன்னு கேட்குறாரு. கொஞ்ச நேரம் யோசனை செய்து விட்டு முனிவர் சொல்கிறார். கர்ணா உன் வலது ஆட்காட்டி விரலை வாயில் வைத்து உண்ணுன்னு சொல்றாரு.

அவர் சொன்னது போல செய்ய கர்ணனுக்கு பசி ஆறிவிடுகிறது. அது எப்படி சாத்தியமானதுன்னு கர்ணன் முனவரிடம் கேட்கிறார். அப்போது கர்ணா நீ மிகப்பெரிய கொடையாளன். தானம் தர்மம் செய்பவன். ஆனாலும் நீ ஒரு தடவை கூட அன்னதானம் செய்யவில்லை. அதனால தான் சொர்க்கத்தில் உனக்குப் பசிச்சிருக்குன்னு சொல்றாரு.

ஒரே ஒரு தடவை மட்டும் அன்னதானம் நடக்குற இடத்தை உன் ஆட்காட்டி விரலால் பிராமணனுக்குக் காமிச்சதால நீ இப்ப அந்த ஆட்காட்டி விரல உண்ணும்போது உனக்கு பசி தீர்ந்து போச்சுன்னு சொல்வாரு. இதைக்கேட்ட கர்ணனுக்கு அழுகையே வந்துவிடுகிறது. தேம்பி தேம்பி அழுகிறார். அய்யோ நான் இவ்வளவு நாள் அன்னதானம் செய்யாமல் விட்டுவிட்டேனே என மனம் வருந்துகிறார்.

உடனே முனிவரிடம் இதற்குப் பரிகாரம் இல்லையா என கேட்கிறார். இருக்கிறது கர்ணா. எமதர்மராஜனிடம் சென்று இதற்கான வரத்தைக் கேள் என்கிறார். உடனே கர்ணன் எமதர்மராஜனிடம் சென்று நான் பூலோகத்திற்கு சென்று 15 நாள்கள் அன்னதானம் செய்து வர எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நான் செய்கிற அன்னதானம் மூலம் பசியால் வாடும் பித்ருக்களுக்கு பசியாற வேண்டும் எனவும் வரம் கேட்கிறார். அதன்படியே வரம் கொடுக்கிறார் எமதர்மராஜன்.

நாளை 11.09.2022 (ஞாயிறு) முதல் 15 நாள்களுக்கு இந்த அன்னதானத்தை செய்யலாம். பிரதமை திதியில் இந்த நாள் வருகிறது. இதனால் தனலாபம் தேடி வரும். 12ந் தேதி திங்கள்கிழமை த்விதியை திதி. இந்த நாளில் நமக்கு என்ன பலன் வரும் என்றால் சந்தான பாக்கியம் கிட்டும். 3வது நாளில் திருதியை திதியில் நமக்கு நினைத்த வரன் அமையும்.

4வது நாளில் சதுர்த்தி திதி வருகிறது. இதன் பலன் பகைவர்களிடம் இருந்து தப்பித்தல், எதிரிகள் ஒழிதல் ஆகிய நல்ல பலன்கள் கிடைக்கும். 5ம் நாளில் பஞ்சமி திதி வருகிறது. இதன் பலன் சொத்துக்கள் சேரும். 6ம் நாளில் சஷ்டி திதி வரும். இன்று நாம் கொடுக்கும் அன்னதானத்தின் பலனாக புகழ் வந்து சேரும். வாழ்க்கையில் உயர உயர போகலாம். சப்தமி திதி 7ம் நாளில் வருகிறது.

annathanam
annathanam

இதில் உயர்பதவி கிடைப்பதற்கான பலன் கிடைக்கும். 8ம் நாள் அஷ்டமி திதி வருகிறது. இந்த நாளில் சமயோசித புத்தி மற்றும் அறிவாற்றல் வளரும். 9ம் நாளில் நவமி திதி வருகிறது. இதன் பலனாக பெண் குழந்தைகள் பிறக்கும். திருமண தடைகள் நீங்கும். 10ம் நாளில் தசமி திதி வருகிறது. 20.9.2022 செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். 11ம் நாளில் ஏகாதசி வருகிறது.

கல்வி, கலையில் மேலும் மேலும் உயர்ந்து வெற்றி கிடைக்கும். 12ம் நாளில் துவாதசி திதி வருகிறது. ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். 13ம் நாளில் திரயோதசி திதி வருகிறது. இதன் பலனாக உழவுத்தொழில் செழிக்கும். பசுக்கள் விருத்தியாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். 14ம் நாள் சதுர்த்தசி திதி வருகிறது. பாவம் நீங்கி, உங்களுக்கும் உங்களது 7 தலைமுறைக்கும் வந்து புண்ணியங்கள் சேரும்.

15ம் நாள் அதாவது 25.9.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இதுவும் பிரதமை திதி தான். அதாவது பிரதமை திதியில் ஆரம்பித்து பிரதமை திதியில் முடிவது தான் மகாளய புண்ணிய காலமாகும். இந்த நன்னாளில் அன்னதானம் செய்வதன் மூலம் முன்னர் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும்.

அதனால் தான் அரசாங்கமே திருக்கோவில்கள் தோறும் அன்னதானத்தை செய்து நல்ல பலன்களைத் தேடி வருகிறது.

 

Leave a Comment