எல்லோருக்கும் எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை வரும். என்றும் மார்க்கண்டேயன் போல சில நடிகர்கள் இருப்பார்கள். உதாரணமாக நடிகர் சிவக்குமாரைச் சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன? உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க என்ன தான் வழி? இதற்குப் பதில் அளிக்கிறார் ராயல் மல்டி கேர் டாக்டர் ராஜா.
ஒரு நாளைக்கு 13 மைலாவது நடக்க வேண்டும். அப்போது தான் எலும்பு ஜாயிண்ட்கள் எல்லாம் நல்லாருக்கும். பிரண்டை துவையலில் நிறைய கால்சியம், உளுந்தங்களி, முடக்கத்தான், முருங்கைக்கீரை, பசும்பால், ராகி என இந்தப்பொருள்களில் எல்லாம் நிறைய கால்சியம் உள்ளது. இதை நாம் இப்போது மறந்துவிட்டோம்.
எல்லா நோய்களுக்கும் காரணம் மூவ்மெண்ட் தான். இது குறையும்போது நோய்கள் வர ஆரம்பிக்கிறது. நம் உடல் நமக்கு என்னென்ன சத்துக்கள் தேவையோ அதை கன்வர்ட் பண்ணி மாற்றி எடுத்துக்கொண்டு உபயோகிக்கும் ஆற்றல் வாய்ந்தது.
பாடிக்குள்ளே இருக்குற அழுக்கு எல்லாம் வெளியே போகணும்னா நல்லா வேலை செய்யணும். அப்போ தான் புதுசா வேற வேற செல்கள் உருவாகும். இல்லாவிட்டால் உள்ளுக்குள் தேங்குன அழுக்குகளே சேர்ந்து அதையே பயன்படுத்தி பயன்படுத்தி இறந்த செல்கள உருவாகக் காரணமாகிவிடும்.
தொடர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் தோள்வலி, இடுப்பு வலி வருவதற்கு என்ன காரணம் என்றால் அவர்கள் ஒரே வேலையை மட்டுமே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். உடலின் மற்ற பாகங்களுக்கு அதுபோல் பயிற்சிகளைச் செய்வதில்லை. அதனால் தான் இதுபோன்ற வலி வருகிறது.
உடலின் அனைத்துப்பாகங்களிலும் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தினமும் முறையாக செய்யும் உடற்பயிற்சி தான்.
நடைபயிற்சி செய்வது 100 சதவீதம் நல்லது. ஒருநாள் பூரா நின்னுக்கிட்டும், உட்கார்ந்து கிட்டும் வேலை செய்றவங்களுக்கு ரிவர்ஸ் பம்பிங்கே இல்லை. அப்படின்னா நம்ம கால்ல உள்ள ரத்தமானது மேலே வருவதில்லை. அப்படி என்றால் அது அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்கும்.
முதலில் ஒரு செயலை உடனடியாகப் பின்பற்ற முடிவதில்லை. 21 நாள்கள் முறையாகச் செய்தால் போதும். அதுவே பழக்கமாகி விடும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்போம்.
ஆனால் அது 2 நாள்கள் செய்வோம். அதன்பிறகு அசால்டாக விட்டு விடுவோம். அதை நாம் ஒரு கடமையாகச் செய்ய வேண்டும். அப்போது தான் தினமும் செய்ய முடியும்.
காலை 10.30க்கும் நடைபயிற்சி செய்வது அவசியம். இது தான் வெயிட்டைக் குறைக்க உதவும் பயிற்சி. வாரத்திற்கு ஒருநாளாவது உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.