மூன்று நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இருக்காது என்பது போல் தகவல் அதிகமாக பரவியது. ஏனென்றால் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இத்தகைய முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்ககம் விளக்கமளித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி விவகாரத்தில் தொடக்கப்பள்ளி கல்வி இயக்ககம் விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில் தமிழகத்தின் அரசு தொடக்க பள்ளிகளில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது என்று தொடக்கக்கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்ற அங்கன்வாடிகளில் பணியமர்த்தி இருந்த இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
மேலும் மழலையர் வகுப்புகளை கையாள்வதில் சிக்கல் ஏதேனும் இருந்ததால் ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிகளுக்கு மாற்றப்பட்டதாக விளக்கமளித்துள்ளார். அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக வெளியான தகவலுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது மறுப்பு தெரிவித்துள்ளது.