நம் இந்தியாவில் விறுவிறுப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் இந்த ஆண்டு மட்டும் 10 அணிகள் இடம்பெற்று சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் ஆக்ரோஷமாக ஆடி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.
மேலும் குஜராத் அணி தகுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த நிலையில் இன்றைய ஆட்டம் பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு இடையே நடக்கிறது. இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமான ஆட்டமாக இரண்டு அணிகளுக்கும் காணப்படுகிறது. இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.
அதன்படி ஐந்தாவது இடத்தில் டெல்லியும், ஏழாவது இடத்தில் பஞ்சாப் அணியும் உள்ளன. ஆனால் ஸ்ட்ரைக் ரேட் இரண்டு அணிகளுக்கும் பாசிட்டிவாக காணப்படுவதால் இரண்டு அணிகளும் தொடர்ந்து வெற்றி பெற்றால் தகுதி சுற்றுக்கு நுழையும் வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் டெல்லியோ, பஞ்சாப்போ வெற்றி பெற்றால் நேரடியாக 4வது இடத்துக்கு சென்று விடும். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தகுதி சுற்று என்பது கேள்விக்குறியாக மாறிவிடும் நிலை காணப்படுகிறது. இந்த ஆட்டம் இன்று இரவு 07:30 மணிக்கு மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.