காவல்துறையினருக்கு மாஸ்க், க்ளவுஸ், சானிட்டைசர்களை வழங்கிய விஷால்!!

கொரோனா வைரஸுக்கு இதுவரை உலகின் எந்தவொரு நாட்டிலும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் சிறு தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் கஞ்சிக்கு…

கொரோனா வைரஸுக்கு இதுவரை உலகின் எந்தவொரு நாட்டிலும் மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கால் சிறு தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் கஞ்சிக்கு வழி இல்லாத மக்களுக்கு தன்னார்வலர்கள் பலரும் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் சினிமாத்துறையினைப் பொறுத்தவரை ரஜினி, கமல், சல்மான்கான், ஷாருக்கான், லாரன்ஸ், அஜித், விஜய், சூர்யா, அக்‌ஷய்குமார், தனுஷ், சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி,  போன்றோர் மக்களுக்கு உதவி செய்ததோடு, அரசாங்கத்திற்கும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

8649a145b7af99b05a917084055b0501

அந்தவகையில் நடிகர் விஷால் தனது அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறார். அந்தவகையில் கொரோனா ஊரடங்கினை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினருக்கு உதவிகள் செய்துள்ளார்.

அதாவது அண்ணாநகர் துணை ஆணையர் எஸ்.பி.முத்துசாமி IPS அவர்களை நேரில் சந்தித்து மாஸ்க், க்ளவுஸ், சானிட்டைசர் போன்றவற்றினை வழங்கியுள்ளார். மேலும் இவருடன் நடிகர் சௌந்தர ராஜா, நடிகர் ஜீவா மற்றும் விஷாலின் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன