பூஜா ஹெக்டெ இந்தி, தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இவர், தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்தார்.
அதன்பின்னர் ஒகா லைலா கொசம், முகுந்தா என்ற 2 தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் ஹிட் ஆக இந்தியில் மொகஞ்சதாரோ என்னும் படத்தின்மூலம் கால் பதித்தார்.
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெற்றுவரும் இவர், மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர், ஜான் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
கொரோனா லாக்டவுனில் சமூக வலைதளங்களில் போட்டோஷுட் புகைப்படங்கள், வீடியோக்கள் என அம்மணி ஹேப்பியாக இருந்து வந்தார், யார் கண்ணு பட்டுச்சோ தெரியல நேற்று நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கு சிலரால் முடக்கப்படுள்ளதாகத் தெரிய வந்தது, மேலும் அம்மணி உடனே தொழில்நுட்ப குழுவினரை அணுகி 3 மணிநேரத்தில் இன்ஸ்டாகிராம் கணக்கை சரி செய்துள்ளார்.
ரூ.2 கோடி சம்பளம் பெற்றுவரும் பூஜா தற்போது மீண்டும் இந்தியில் சல்மான்கான் ஜோடியாக கபி ஈத் கபி என்ற படத்தில் நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.