சீரியல் படப்பிடிப்புக்கு 50 பேருக்கு அனுமதி வேணும்… குஷ்பு கோரிக்கை!!

இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 வரையும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பணிக்குத் திரும்ப முடியாததால் உணவுத் தட்டுப்பாடு உட்பட பல அவதிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழக…

இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி துவங்கி மே 31 வரையும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பணிக்குத் திரும்ப முடியாததால் உணவுத் தட்டுப்பாடு உட்பட பல அவதிகளுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தமிழக முதலமைச்சர் பல பணிகளிலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வினை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில சினிமாவினைப் பொறுத்தவரை படப்பிடிப்புகள் அல்லாது நடைபெறும் பின்னணி வேலைகளுக்கு அனுமதி சமீபத்தில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்தவாரம், சின்னத் திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் நடிகை குஷ்பு சின்னத் திரை சீரியல் படப்பிடிப்புக்கு 35 பேர் என்பது பின்னணியில் வேலை செய்யும் டெக்னீஷியன்களே தேவைப்படுவர்.

6b46d627ed4f29e459c8edb301a30cd7

அதன்பின்னர் நடிகர், நடிகைகள் 20 பேர் என்றாலும் குறைந்தது 50 பேருக்கு கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணியுடன் இணைந்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

நேற்று முன் தினம் ஆர் கே செல்வமணி கூறும்போது, “சின்னத்திரைக்கு குறைந்தது 40 பேர் இருந்தால் மட்டுமே வைத்து படம் எடுக்க முடியும். 20 பேர் என்பது முற்றிலும் பொருத்தமற்றது” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன