கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படமாகும். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினை அடுத்து தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்துவந்த சிவகார்த்திகேயனுக்கு அது ஹிட் படமாக அமைந்தது.
காமெடி, சென்டிமென்ட், காதல் படங்கள் மட்டுமே சிவாவுக்கு ஹிட் கொடுப்பதாக ரசிகர்களும் கூறுவதையடுத்து இனி ஆக்ஷன் படங்களுக்கு நோ என்பதுபோல் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
கோலமாவு கோகிலா படத்தை எடுத்த நெல்சன் படமான டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. டாக்டர் படத்தினை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
குறைவான பட்ஜெட்டில், வலுவான திரைக்கதை மூலம் கோலமாவு கோகிலா போல் இந்தப்படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தத் திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
90 சதவீதம் படப்பிடிப்பினை முடித்தநிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக டாக்டர் படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது, தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தவாரம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.