அப்பாடி படப்பிடிப்பு முடிந்தது… பிரித்விராஜ் சொன்ன குட் நியூஸ்!!

சீனாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகின் பலநாடுகளையும் பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. தற்போதுவரை தடுப்பூசிகளோ, மாற்று மருந்துகளோ கண்டுபிடிக்க முடியாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே ஆப்ஷனாக ஊரடங்கு…

சீனாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகின் பலநாடுகளையும் பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளது. தற்போதுவரை தடுப்பூசிகளோ, மாற்று மருந்துகளோ கண்டுபிடிக்க முடியாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே ஆப்ஷனாக ஊரடங்கு இருந்துவருகின்றது.

ஊரடங்கின் பின்னர் அனைத்துவகையான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் விமானப் போக்குவரத்து சேவையானது முடக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வெளிநாடு சென்றவர்கள் இந்தியா திரும்பமுடியாமல் திணறி வருகின்றனர்.

34edc54107373dc88398e222c6d85394-1

அந்தவகையில் நடிகர் பிரித்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் நடிப்பதற்காக ஜோர்டான் நாடு சென்றிருந்தார். விமான சேவைகள் நிறுத்தப்பட அவரால் வீடு திரும்ப முடியவில்லை.

View this post on Instagram

#Aadujeevitham Schedule Pack up! ????❤️

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on

மேலும் பாலைவனத்தில் உணவு கிடைப்பதும் சிரமமாக உள்ளது என அவர் வலைதளங்களில் பதிவிட அவரது தாயார் படக் குழுவினரை மீட்டு வரச் செய்யுங்கள் என்று கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். 

இந்தநிலையில் நேற்று நடிகர் பிரித்விராஜ் இன்ஸ்டாகிராமில், “ஜோர்டான் பாலைவனத்தில் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதை மகிழ்ச்சியாக கூறிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். உண்மையில் இந்தச் செய்தி அவர்களின் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன