விக்னேஷ் சிவன் 2012 ஆம் ஆண்டு போடா போடி திரைப்படத்தின்மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு ஹிட் ஆக, ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்ற இயக்குனர் ஆனார். அதன்பின்னர் அடுத்து 2015 ஆம் ஆண்டு நானும் ரௌடிதான் என்ற படத்தையும், 2018 ஆம் ஆண்டு தானா சேர்ந்த கூட்டம் படத்தையும் இயக்கினார்.
அதுமட்டுமின்றி நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் நெற்றிக் கண் படத்தின்மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். சினிமாவில் 40 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியும் உள்ளார்.
சமீபத்தில் இவர் நயன் தாரா, சமந்தா, விஜய் சேதுபதி மூவரையும் வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தினை எடுக்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.
இம்மாதம் துவங்க இருந்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்புகள் துவங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இப்படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான லலித்குமார் ட்விட்டரில், “ஆகஸ்ட் மாதம் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.