50% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள ரெடி.. நடிகர் மஹத் அறிவிப்பு!!

சிம்புவின் நடிகரான நடிகர் மஹத் வல்லவன், காளை போன்ற படங்களில் பெயரிடப்படாத ரோல்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் படமான மங்காத்தா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்…

சிம்புவின் நடிகரான நடிகர் மஹத் வல்லவன், காளை போன்ற படங்களில் பெயரிடப்படாத ரோல்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் படமான மங்காத்தா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் பெற்றார்.

அதன்பின்னர் ஜில்லா, வட கறி, வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற தமிழ்ப் படங்களிலும், பச்க்பென்ச் ஸ்டுடென்ட்,   பன்னி ன் செர்ரி, புரி சார் ஐ லவ் யு, பதம் பிஸ்த, லேடீஸ் அண்ட் கேன்ட்லேமேன் போன்ற தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.

3b42f5c604e740c513adbf5d63528e78

இவர் படங்களைவிட, பிக் பாஸ் சீசன் 2 வில் பங்குபெற்று அதன்மூலமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார், பிக் பாஸ் வீட்டின் உள்ளே இவர் பல சர்ச்சைகளுக்கு ஆளாகினார்.  யாஷிகாவுடனான காதல் இவருக்கு ஆதரவாளர்களையும், எதிர்ப்பாளர்களையும் கொடுத்தது.

ஆனால் சில விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியால் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். சமீபத்தில் இவரது நீண்டநாள் காதலியான பிராச்சி மிஸ்ராவைத் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தயாரிப்பாளர்கள் லாக்டவுனால் பல கோடி நஷ்டங்களை சந்தித்துள்ள நிலையில், நடிகர்கள் பலரும் தங்களது சம்பளத்தைக் குறைத்துள்ளனர். அந்தவகையில் மஹத், தன்னுடைய சம்பளத்தில் 50% குறைத்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன