சிரஞ்சீவி படத்தில் இருந்து வெளியேறிய காஜல்… அவரே கொடுத்துள்ள விளக்கம்!!

சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சைரா நரசிம்ம ரெட்டி, இந்தப் படம் பாகுபலி படம் போல் பெரிய அளவில் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பல மொழிகளில் வெளியான இந்தப்…

சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சைரா நரசிம்ம ரெட்டி, இந்தப் படம் பாகுபலி படம் போல் பெரிய அளவில் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பல மொழிகளில் வெளியான இந்தப் படம் பெரிய அளவில் தோல்வியினைச் சந்தித்தது.

சைரா நரசிம்மா படத்திற்குப் பின்னர் சிரஞ்சீவி நடித்துவரும் படம் ஆச்சார்யா திரைப்படமாகும், இந்தத் திரைப்படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

48b71acd1d4520226d8127abb99558e6

ஆனால் திடீரென த்ரிஷா அந்தப் படத்தில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியானது. த்ரிஷா தரப்பில் கொடுத்த விளக்கத்தின்படி, “பொன்னியின் செல்வன் படத்தின் ஷுட்டிங்கிற்குக் கொடுத்த கால்ஷிட் காரணமாக ஆச்சார்யா படத்தில் நடிக்க முடியவில்லை” என்று தெரிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து காஜல் அகர்வால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கடந்த ஒரு வார காலமாக ஆச்சார்யா படத்தில் இருந்து காஜல் அகர்வால்  வெளியேறியதாக தகவல் வெளியாகி பரவி வருகிறது.

இதுகுறித்து காஜல் விளக்கம் அளித்துள்ளதாவது, “தமிழ் படத்தில் நடிக்க அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளேன் என்ற செய்தி உண்மைதான், எனினும் சிரஞ்சீவியின் படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவல் பொய்யானது” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன