கொரோனா வைரஸ் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி 2.5 ஆண்டுகளுக்கும் மேல் உலக நாடுகளை ஆட்டிப் படைத்தது. கொரோனா வைரஸைக் குணப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுக்குள் வைக்க சமூக இடைவெளி, ஊரடங்கு, சானிடைசர் எனப் பலவகையான அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டது. ஊரடங்கின் ஒரு கட்டமாக விமான சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பின்னர் படிப்படியான ஊரடங்குத் தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சர்வதேச விமானங்கள் சேவைக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன்பின்னர் ஊரடங்குத் தளர்வில் விமான சேவை சார்ந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
அந்தவகையில் சர்வதேச விமான சேவை இன்று முதல் வழக்கம்போல் துவங்கியுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை வழக்கம்போல் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.