மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.. ஆட்டோ, பேருந்துகள் இரண்டு நாளைக்கு இயங்காது!

நாளையும், நாளை மறுநாளும் ஆட்டோ, கால் டாக்சி, பேருந்து என போக்குவரத்துகள் இயங்காது என சிஐடியூ பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அறிவித்துள்ளார்.

அதாவது மத்திய அரசு அதிகரித்துவரும் விலை உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டும்;

பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்யக்கூடாது;

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும்;

என்பது உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தமானது செய்யப்பட உள்ளது.

மேலும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தொழிற் சங்கங்களும் பங்கேற்க உள்ளன.

அரசுத் துறையில் இந்தப் போராட்டத்தில் 1,00,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகின்றது.

இதுபோக ஆட்டோத் தொழிலாளர்கள் 3,00,000 பேர் மற்றும் கால் டாக்சி தொழிலாளர்கள் 60,000 பேர் பங்கேற்க உள்ளனர்.