கடந்த 2008ல் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். முதல் படமே வெற்றி என்றாலும் தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக இருந்தால்தானே ஜெயிக்க முடியும். அப்படியாக பல வருடம் போராடி ஆக்சன் ஹீரோவாக ராட்சஷன் படத்தின் மூலம் ஜெயித்தார்.
தொடர்ந்து சிலுக்குவார் பட்டி சிங்கத்திலும் போலீசாக நடித்தார். இவரின் அப்பா ரமேஷ் குடவாலா போலீஸ் ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவராவார்.
முகச்சாயலில் இருவருமே ஒரே தோற்றத்தில்தான் உள்ளனர் இருவரின் படத்தை ஒப்ப்பிட்டு ரியல் அண்ட் ரீல் என டுவிட் செய்துள்ளார் இவர்.