கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள், விளையாட்டுப் போட்டிகள், தொழில்கள் என எதுவும் நடைபெறவில்லை.
அதேபோல் இந்தியா முழுவதும் ஊரடங்கானது மார்ச் 24 ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் உணவிற்கும் கஷ்டப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் உதவிகளை வழங்கியபோதிலும் சினிமாத் துறையில் உள்ள நடிகர், நடிகைகள் நன் கொடையினை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சம்
கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம்,
தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம், புதுவை முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் என மொத்தமாக ரூ.1.30 கோடி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி விஜய்க்கு நன்றி தெரிவித்ததுடன், இதே போல மற்ற நடிகர்களும் பாண்டிச்சேரிக்கு நிதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அந்த வீடியோவைப் பகிர்ந்த நகைச்சுவை நடிகர் கருணாகரன் ‘same salary please’ என்று குறிப்பிட, விஜய் இவரை போதும் போதும் என்னும் அளவு திட்டித் தீர்த்து வருகின்றனர். இதனால் கருணாகரன் தானே தன்னுடைய அக்கௌண்ட்டை முடக்கியது தெரியவந்துள்ளது.