நடிகர் மற்றும் இயக்குனர் சேரன் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் நடிகராக இயக்குனராக இருந்த காலத்தில் மீடியாக்களில் அடிபட்டதை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதுதான் அதிகம் அடிபட்டார்.
தற்போது வீட்டில் எல்லோரும் தனித்திருப்பதால் நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் என பலரும் டுவிட்டரில், ஃபேஸ்புக்கில் அதிகம் வலம் வருகின்றனர்.
அப்படியாக சேரன் அவர்கள், எழுதியுள்ள டுவிட் இயக்குனர் மகேந்திரனை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது.
காலையில் நித்தம் நித்தம் நெல்லுச்சோறு பாடல்.. மகேந்திரன் சார் ஞாபகம்.. எப்படிப்பட்ட ஜோடனை விசயங்களையெல்லாம் சினிமாவில உடைச்சு சினிமாவை இயல்பான வாழ்க்கைக்குள்ள நகர்த்திருக்காங்க இந்த பெரியவங்க.. முதல்ல அந்த கேட்டை உடைப்பதுதாங்க சாதனை.. என டுவிட்டியுள்ளார் சேரன்.