புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களில் முக்கியமானவர் நடிகர் சத்யராஜ். சிறுவயதில் பள்ளிக்காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களாக பார்த்து பார்த்து எம்.ஜி.ஆரின் அதி தீவிர ரசிகராக இருந்தார். தன்னுடைய அந்தக்கால படங்களில் எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட வசனங்கள், காட்சியமைப்புகள் வருவது போல சத்யராஜ் பார்த்துக்கொள்வார்.
எம்.ஜி.ஆர் கடைசியாக கலந்து கொண்ட சினிமா விழாவும் சத்யராஜின் படம்தான் அது சத்யராஜ் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்பட 100வது நாள் விழாதானாம்.
எம்.ஜி.ஆர் மீது தீவிர விசுவாசமாக இருக்கும் சத்யராஜை பார்த்து உனக்கு என்னப்பா பரிசு வேண்டும் என எம்.ஜி.ஆர் கேட்டாராம், எதை கேட்பது என்ன கேட்பது என தெரியாமல் அய்யா உங்களிடம் இருக்கும் அந்த உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை கொடுங்க என சத்யராஜ் பவ்யமாக கேட்டு வாங்கி இருக்கிறார். எம்.ஜி.ஆரும் இதைத்தான் கேட்கிறாயா என கொடுத்தாராம்.
அந்த கர்லாக்கட்டையை தன் ஞாபக சின்னங்களில் ஒன்றாக சத்யராஜ் பாதுகாத்து வருகிறார். அந்த நேரத்தில் சத்யராஜ் நடித்த புதிய வானம் படத்தில் இந்த கர்லாக்கட்டையை சத்யராஜ் உபயோகப்படுத்தி இருக்கிறாராம்.