மாதவி இந்த பெயரை எண்பதுகளில் உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. ரஜினி, கமல் என அந்நாளைய பாப்புலர் ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தவர் மாதவி.
சினிமாவில் அழகான தோற்றமுடைய நாயகியாக எண்பதுகளில் வலம் வந்தவர். அந்தக்கால மாதவியை பார்த்து ரசித்த 50 வயதை கடந்த அங்கிள்களிடம் இப்போதும் கேட்டால் மாதவியை சிலாகித்து பேசுவார்கள்.
மாதவிக்கு வெறித்தனமான ரசிகர் படை அப்போது இருந்தது என்றால் மிகையாகாது. கமல்,ரஜினி நடிக்கும் படங்களில் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா போன்றோர்தான் அந்த நேரங்களில் ஜோடியாக நடித்தனர் அவர்களுள் மாதவியும் ஒருவர்.
கமலுடன் ராஜபார்வை, சட்டம், டிக் டிக்டிக், காக்கி சட்டை, மங்கம்மா சபதம் உள்ளிட்ட படங்களிலும் ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு , உன் கண்ணில் நீர் வழிந்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்து தன் நடிப்பாலும் அழகாலும் கலக்கியவர் இவர்.
அந்த நாள் திரைப்படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியாகவும் நடித்தவர் மாதவி.
96ம் ஆண்டு வரை தென்னக மொழிப்படங்களில் நடித்த இவர் தமிழ் சினிமா நடிகைகளுக்கே உரிய பாணியில் அமெரிக்காவில் திருமணம் செய்து அங்கே செட்டிலாகிவிட்டார். அங்கு ஒரு மருந்து கம்பெனியையும் இவர் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்