விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 14ல் வருடப்பிறப்பை முன்னிட்டு அதற்கு முன்னதாகவே வெளியாகும் சூழல் உள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீடு மட்டுமே நடந்துள்ளது. இன்னும் டிரெய்லர் வெளியாகாத நிலையில் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பெயர் அறியப்பட்டுள்ளது.
அதில் அவர் ஜான் துரைராஜ் என்ற பெயர் அவரின் கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது, படத்தில் அவர் பயன்படுத்திய ஐடெண்டி கார்டின் புகைப்படம் கிடைத்ததை வைத்து இதை அறிய முடிகிறது.
கல்லூரி பேராசிரியாக அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த ஐடெண்டி கார்டு வைரலாகி வருகிறது.டுவிட்டரிலும் இந்த ஜான் துரைராஜ் என்ற பெயர் ட்ரெண்டிங்கில் உள்ளது.