ரஜினி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தனது மக்கள்மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் அப்போது பேசிய ரஜினி மக்கள் எல்லோரும் எழுச்சியாகட்டும் அப்புறம் நான் அரசியலுக்கு வருகிறேன் என்ற வகையில் பேசினார்.
இதை பலரும் விமர்சித்து வருகின்றனர். நீங்கள் தான் மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும் இது செந்தில் செய்த நட்புக்காக காமெடி போல் உள்ளது என எல்லோரும் ஒன்றுபோல கருத்து கூறி வருகின்றனர்.
நட்புக்காக படத்தில் செந்தில் இரண்டு மலைகளை தூக்க போகிறேன் என கூறுவார். எல்லோரும் அதை நம்பி வருகையில் ரெண்டு பேர் சேர்ந்து தூக்கி வைங்க தூக்குறேன் என்பார். இந்த காமெடியைத்தான் ரஜினிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களும் ரஜினியின் பேச்சை குழப்பமாக கருதுபவர்களும் இந்த காமெடியை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து அதை வைரலாக்கி வருகின்றனர்.