சரியான நேரத்தில் சரியான படம்: திமுக தலைவர் முக ஸ்டாலின் பாராட்டு

திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் என்ற திரைப்படத்தை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்தார் இந்த நிலையில் இன்று அவர்…


167585257a64b6754ee29a588fca5efc

திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் என்ற திரைப்படத்தை பாராட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்தார்

இந்த நிலையில் இன்று அவர் ஜீவா நடிப்பில் எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கிய ஜிப்ஸி என்ற திரைப்படத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ தியேட்டரில் பார்த்தார்.

இந்தப் படத்தைப் பார்த்த அவர் படம் குறித்து கருத்து தெரிவித்த போது ’சரியான நேரத்தில் சரியான படம்’ என்று தெரிவித்தார்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மற்றும் திண்டுக்கல் பெரியசாமி ஆகியோர் படம் பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன