
கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் இரண்டு முதல் ஐந்து படங்கள் வரை வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி இரண்டு முக்கிய படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானிசங்கர் நடிப்பில் கார்த்திக்நரேன் இயக்கிய மாபியா என்ற திரைப்படமும் பிரபுதேவா நடிப்பில் உருவாகிய பொன்மாணிக்கவேல் என்ற திரைப்படமும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கார்த்திக் நரேன் இயக்கிய ’துருவங்கள் பதினாறு’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருடைய அடுத்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும், அருண் விஜய் பிரசன்னா ஆகிய இரண்டு நாயகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது,
அதேபோல் முதன் முதலாக போலீஸ் வேடத்தில் பிரபு தேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல ஹிட்டாகியுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் வரும் 21ம் தேதி வெளியாகும் இந்த இரண்டு படங்களும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
