சிவகார்த்திகேயன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்களான, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மற்றும் ’ரஜினி முருகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் பொன்ராம். ஆனால் இவர் இயக்கிய ’சீமராஜா’ என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததால் சிவகார்த்திகேயனுக்கு கடன் அதிகமானது என்று கூறப்பட்டது
இந்த நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து காதல் கதையுடன் சிவகார்த்திகேயனிடம் பொன்ராம் பொன்ராம் கூறியதாகவும், ஆனால் தனது பிசியான ஷெட்யூல் காரணமாக அந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து அதே கதையை எடுத்துக்கொண்டு விஜய்சேதுபதியிடம் பொன்ராம் சென்றதாகவும் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பிப்ரவரியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
விஜய் சேதுபதியுடன் பிரபல நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் விஜய் சேதுபதி மற்றும் பொன்ராம் ஆகிய இருவருக்கும் திரையுலக வாழ்வில் ஒரு திருப்பத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை பொன்ராம் இயக்கி முடித்துள்ளார் என்பதும் அந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது