56வது வயதில் முதல் விருதை பெறும் குணசித்திர நடிகர்!

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து குணசித்திர நடிகராக விளங்கி வரும் நடிகர் ஒருவர் தனது 56வது வயதில் முதல் முறையாக பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். அவர்தான் நடிகர்…


8a93591aab217b3fc77ffb6a4762d269

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து குணசித்திர நடிகராக விளங்கி வரும் நடிகர் ஒருவர் தனது 56வது வயதில் முதல் முறையாக பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். அவர்தான் நடிகர் ஜார்ஜ் மரியான்

சமீபத்தில் வெளியான கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படத்தில் போலீஸ் வேடம் ஒன்றில் ஜார்ஜ் மரியான் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடைய நடிப்பிற்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தீவிரவாதிகளை கொல்ல கார்த்திக்கு அவர்தான் ஐடியா கொடுப்பார்.

இந்த நிலையில் இன்று ஜீ சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த துணை நடிகர் விருது கைதி படத்தில் நடித்த ஜார்ஜ் மரியானுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. தனது இத்தனை வருட சினிமா வாழ்வில் தனக்கு முதல் முறையாக பாராட்டுக்கள் கிடைத்த திரைப்படம் ’கைதி’ என்றும் அது மட்டுமின்றி இந்த படத்திற்காக தற்போது விருதும் கிடைத்துள்ளது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் ஜார்ஜ் மரியான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன