ரஜினி, முருகதாஸ் இருவருக்குமே ஏழரை சனி ஆரம்பமா: ’தர்பார்’ வெற்றி குறித்து ஜோதிடர்களின் கணிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’தர்பார்’ திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது என்பது…


e657169edf3ef70c99127a90cca06ade

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’தர்பார்’ திரைப்படம் வரும் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கான முன்பதிவுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில்தான் ’தர்பார்’ திரைப்படம் வெற்றி பெறுமா? என ஒரு முன்னணி ஜோதிடர் கூறியிருக்கும் தகவலைப் பார்ப்போம். ரஜினிக்கு மகர ராசி திருவோணம் நட்சத்திரம் என்றும், ஏஆர் முருகதாஸ் அவர்களுக்கு மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் என்றும் இருவருக்குமே இது ஏழரை சனி காலம் என்றும் கூறியுள்ள ஜோதிடர் இந்த படம் வெளியாகும் 9 ஆம் தேதி சந்திரன் மிதுன ராசியில் மிருகசிரிஷம் மற்றும் திருவோணம் நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதால் திருவோணம் மற்றும் அவிட்ட நட்சத்திரம் இணையும் கூட்டணி சாதகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்

எனவே ’தர்பார்’ படம் ரிலீசாகும் தேதியில் நட்சத்திரங்கள் அனைத்துமே ரஜினி மற்றும் ஏஆர் முருகதாஸ் ஜாதகங்களுக்கு சாதகமாக இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் ஜோதிடர் கூறியுள்ளார். ஜோதிடர் கூறியது உண்மையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன