எண்பதுகளில் வந்த பல படங்களின் காட்சியமைப்புகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். பல படங்களின் கதைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.
அதாவது சிறுவயதிலேயே தன் தாய் தந்தையை கொன்ற வில்லன் வளர்ந்து பலி வாங்கும் அண்ணன், தம்பிகள், வில்லன் வீட்டுக்கே சென்று அவரிடம் காட்சிக்கு காட்சி மோதி சவால் விட்டு இறுதியில் ஒரு மெகா ப்ளான் போட்டு வில்லன் வீட்டுக்கே சென்று தன் காதலியுடன் ஹீரோ ஆடுவார் காதலியும் மாறுவேடம் போட்டிருப்பார். இதில் மாறுவேடம் போட்டு ஆடுவதுதான் பெரிய கொடுமை.
சிறு மச்சம் மட்டுமே வைத்திருப்பார். அதற்கு முன் குளோசப் ஷாட்டில் அடிக்கடி வில்லனுடன் மோதியிருப்பார். அப்படி இருந்தும் வில்லனுக்கு அவர் யார் என்று தெரிந்திருக்காது.
முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், மிஸ்டர் பாரத், ராஜாதி ராஜா உள்ளிட்ட பல படங்களில் இந்த காட்சிகளை காணலாம். இது போல காட்சிகளில் நடிக்காத எண்பதுகள் கால கட்ட ஹீரோக்கள் குறைவுதான்.
சில படங்களில் ஒரு பாட்டில் மட்டுமல்லாது சில தொடர் காட்சிகளில் மாறுவேடம் என்ற பெயரில் நடித்திருப்பர். அதை வில்லன் உட்பட யாருமே கண்டுபிடிக்க மாட்டார்கள்.
ரஜினிகாந்தின் மிஸ்டர் பாரத், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் இது போல காட்சிகளை காணலாம். சாதாரணமாக வில்லன்களுடன் பேசிக்கொண்டிருந்த ரஜினி திடீரென சாமியார் கெட் அப், வால்பாறை வரதன் என்ற கதாபாத்திரத்தில் திடீரென மச்சம் மட்டும் வைத்து வேஷம் போட்டு கொண்டு வருவார். யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.
இப்படி தொடர் லாஜிக் மீறலை 80களில் வந்த பல திரைப்படங்களில் தொடர்ந்து பார்க்கலாம்.