சரவணா ஸ்டோர் அருள் சரவணன் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் அந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதும் தெரிந்ததே
அஜித், விக்ரம் இணைந்து நடித்த ‘உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அருள் சரவணன் நடித்த முதல் படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அருள் சரவணன் ரசிகர் மன்றம் பெயரில் சென்னையில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ’உழைப்பில் உயர்ந்த கதாநாயகன் அருண் சரவணன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
பல படங்கள் நடித்து மக்கள் மனதில் நின்ற பின்னரே ரசிகர் மன்றம் தோற்றுவிக்கப்படும் நிலையில் முதல் படத்தின் பூஜை போட்ட சில நாட்களிலேயே ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது