சூரியுடன் புஷ்பா புருஷன் காமெடியின் மூலம் புகழ்பெற்று பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் எல்லா மக்களுக்கும் தெரிந்தவரானவர் ரேஷ்மா.
இவருக்கு திருமணமாகி விவாகரத்தாகி தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருபவர்.
இந்நிலையில் இவர் மறு திருமணம் செய்ய போகிறார் என சில தளங்களில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது.
ஒரு நண்பரோடு இருக்கும் புகைப்படத்தை வைத்து ரேஷ்மா திருமணம் செய்ய இருக்கும் நபர் என செய்திகள் வெளியாகி இருந்தது.
இது போல செய்திகளை பார்த்து ரேஷ்மா ஒரு டுவிட் இட்டுள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது,
எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய எந்தவொரு செய்தியும் பொய்யானது, வெறும் ஊகம். தயவுசெய்து என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம். நன்றி என கூறியுள்ளார்.