நடிகை நிக்கி கல்யாணி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்றான ’ராஜவம்சம்’ என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நிக்கி கல்ராணி தனது காதல் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சென்னையைச் சேர்ந்த ஒருவரை தான் காதலித்து வருவதாகவும், அவர் சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை என்றும், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் அவருடன் திருமணம் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் யார் என்பதை பத்திரிகையாளரிடம் நிக்கி கல்ராணி கூற மறுத்துவிட்டார்
ஏற்கனவே நிக்கி கல்ராணி ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த நிலையில் தற்போது அந்த செய்தி உண்மையாகி உள்ளதாக தெரிகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் திருமணம் என்று நிக்கி கல்ராணி கூறியுள்ளதால் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது