மணிரத்தினம் பிரமாண்டமாக இயக்கவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சமீபத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவருடைய மூத்த மகன் கேரக்டரில் நடித்த தீஜே என்ற நடிகர் இணைந்துள்ளார்என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது மணிரத்னம் தயாரித்து வரும் ’வானம் கொட்டட்டும்’ என்ற படத்திலும் தனுஷ் பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக அமுல்பேபி என்று செல்லமாக அழைக்கப்பட்ட கேரக்டரில் நடித்தவர் அமிதேஷ். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களில் தற்போது நடித்துள்ள நிலையில் மணி ரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ’வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
நீண்ட இடைவெளிக்கு பின்னர் சரத்குமார் மற்றும் ராதிகா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் இந்த படத்தை மணிரத்னம் அவர்களின் உதவியாளர் இயக்கி வருகிறார்