விஷால் நடிப்பில் ஆக்சன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது. சுந்தர்சி எப்போதும் நகைச்சுவை படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார் அதில் வெற்றியும் காண்பார் இந்த ஆக்சன் திரைப்படம் பெயருக்கேற்றபடி முழுக்க முழுக்க ஆக்சனாகவே இயக்கியுள்ளார்.
அவ்வப்போது சுந்தர் சி ஆக்சன் படங்களை இயக்கி பார்ப்பார் அவரின் ஆக்சன் படங்களிலும் காமெடி இல்லாமல் இருந்ததில்லை. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இயக்கிய ரிஷி உள்ளிட்ட படங்கள் அவருக்கு தோல்விப்படங்களே.
இந்நிலையில் ஆக்சன் என்றே பெயர் வைத்து வரும் இப்படம் முழுக்க முழுக்க ஆக்சனாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை காட்சியமைப்புகள் ட்ரெய்லரில் அதைத்தான் உணர்த்துகின்றன.
தீபாவளி படங்களுக்குபிறகு தற்போதுதான் ஒரு முன்னணி ஹீரோவின் படம் ரிலீசாவது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ராம்கி, பழ கருப்பையா போன்றோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது