விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி துவங்கி, இந்த மாதம் 6 ஆம் தேதியொடு முடிவடைந்தது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ், இவர் இந்த சீசனின் டைட்டிலையும், 50 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.
இவர் ஆரம்பம் முதலே மிக சிறப்பானவராக இருந்ததோடு, தன் பாடல்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்துவந்தார். அபிராமி விஷயத்தில் இவருக்கு பிரச்சினை ஏற்பட்டது, அதனைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையிலும் அவர் சிக்கியதாக தெரியவில்லை.
டைட்டில் வென்று மலேசியா சென்ற இவருக்கு அதிரடியான வரவேற்பு மலேசிய மண்ணில் அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் மலேசிய ரசிகர்களை சந்தித்து பாராட்டுகளைப் பெற்றுவந்தார். தற்போது அவருக்கு சிறந்த சாதனையாளருக்கான விருது மலேசிய அரசால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அதிக பிரபலமான மலேசிய கலைஞர் என்ற பட்டத்தினையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.