மதுமிதா கேரக்டரை மாத்திக்கணும்- அபிராமி…!!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் முதல்நாளே கவின்மேல் காதல்கொண்டு பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு ஆளானார், கவின் வேண்டாம் என்று கூற அடுத்தநாளே பாட்டில்…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் அபிராமி.

பிக் பாஸ் வீட்டில் முதல்நாளே கவின்மேல் காதல்கொண்டு பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு ஆளானார், கவின் வேண்டாம் என்று கூற அடுத்தநாளே பாட்டில் பேபி என்று ஒரு பிரச்சினையைக் கிளப்பினார்.

அடுத்து ஒரிரு வாரங்கள் முகினுடனான காதல் பற்றி கூறி முகினையும் பிரச்சினையில் இழுத்துவிட்டார். முகின் விலகிச் சென்றபோதும், விடாமல் அவர் பின்னாடியே சுற்றி வந்தார்.

கமல் ஹாசனும் அவருக்கு அறிவுரை சொல்லியே டையர்டு ஆகிப் போனார். இறுதியில் முகின் உடன் சண்டையிட்டு, அது அடித்துக் கொள்ளும் அளவு போனது.

9b85e259b182ac5659e5e98d2f704e43

வெளியே வந்து அதிக அளவில் பேட்டி அளித்தவர் லிஸ்ட்டில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். அந்தவகையில், மதுமிதா எழுப்பிய உள்ளாடை சர்ச்சை குறித்து அபிராமியிடம் கேட்டபோது, “ நான் மதுமிதாவை ஒரு அடம்பிடிக்கும் குழந்தையாகவே பார்த்தேன், நான் உள்ளாடை சர்ச்சையால் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டேன், ஆனால் அவர் ஒரு குறுகிய மனப்பான்மை கொண்டு வாழ்கிறார். அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கூறி உள்ளார்.

இதனால் கடுப்பாகிப் போன மதுமிதா ரசிகர்கள் நீங்க மாத்திக்க நிறைய இருக்கு, அதைப் போய் பண்ணுங்க அபிராமி” என்று பதிவிட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன