பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வின்னர் என்று போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் கருத்து தெரிவித்தபோது பெரும்பாலானோர் முகின் பெயரையே கூறினர். சாக்சி, ஷெரின் பெயரை கூறிய நிலையில் கவின் மட்டும் லாஸ்லியா வெற்றி பெற்றால் தனக்கு பெருமையாக இருக்கும் என கூறினார்.
மீரா மிதுன் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் சாண்டியின் பெயரை கூறினர். சேரன் ஆச்சரியமாக தனது மகள் லாஸ்லியா பெயரை கூறாமல் முகின் பெயரை கூறினார். அதேபோல் வனிதா, லாஸ்லியா பெயரை கூறியதும் ஒரு ஆச்சரியமாக இருந்தது. தர்ஷன் முகின் பெயரை கூறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் சாண்டியின் பெயரை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் உண்மையான வின்னர் யார் என்பது இன்னும் ஒருசில நிமிடங்களில் தெரிய வரும்