இன்றைய இளைஞர்களுக்கு 30 வயதினைக் கடந்தாலே திருமண ஏக்கம் தொற்றிக் கொள்கிறது. தம்முடன் இருந்தவர்கள் திருமணம் முடித்து குழந்தை பெற்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் பெண்தேடும் படலத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். ஆனால் இங்கு ஓர் ஜோடி தங்கள் வயதினைப் பற்றிக் கவலைப் படாமல் திருமணம் செய்திருக்கின்றனர்.
சாதாரணமாக வெளிநாடுகளில் இரண்டாவது திருமணம் என்பது சர்வசாதாரணமாக நடக்கக் கூடியது. அதேபோல் லிவிங் டூ கெதர் கலாச்சாரமும் அங்கு வெகு பிரபலம். ஏனெனில் கடைசிக் காலத்தில் தங்களுக்குக் கண்டிப்பாக ஓர் துணை வேண்டும் என்பதை உலகம் முழுக்க ஏற்றிருக்கிறார்கள்.
அம்பானி முதல் நயன்தாரா வரை: ஆடம்பர திருமணத்தால் கடனில் சிக்கும் நடுத்தர வர்க்கத்தினர்..
அப்படி இந்த ஜோடி முடித்த திருமணம் தான் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. திருமணத்தில் என்ன உலக சாதனை என்கிறீர்களா? இவர்கள் வயதுதான். இதில் மாப்பிள்ளைக்கு வயது 100.. மணப்பெண்ணுக்கு வயது 102. கேட்டாலே தலை சுற்றுகிறதா? 100 வயது மாப்பிள்ளை 102 வயது மணப்பெண்ணை திருமணம் முடித்து அதிக வயதில் திருமணம் முடித்தவர்கள் என்ற சாதனையைப் பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்வியா நகரைச் சேர்ந்த மாப்பிள்ளை பெர்னி லிட்மேன் என்ற தாத்தாவிற்கு ஏற்கனவே நிறைய பேரக் குழந்தைகள் உண்டு. அதேபோல் மணப்பெண் மார்ஜோரி ஃபிடர் மேன் என்ற பாட்டிக்குக்கும் பேரக்குழந்தைகள் உண்டு. கடைசிக் காலத்தில் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக மாற்ற விரும்பிய அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு திருமணம் முடித்துள்ளனர். இதன் மூலம் அதிக வயதில் திருமணம் முடித்தவர்கள் என்ற சாதனையைப் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்கள் இருவருமே கடந்த பல ஆண்டுகளுக்கு முன் ஒரே கல்லூரியில் ஒரே பருவத்தில் படித்தவர்களாம். ஆனால் இருவரும் சந்தித்தது கூட கிடையாதாம்.