டிஜிட்டல் சாதனங்களின் அதிகரிப்பு காரணமாக கையெழுத்து கலை குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவிட்டது. ஏனெனில் பாரம்பரியமான பேனா மற்றும் காகிதத்தை டைப்பிங் மாற்றியிருக்கிறது.
கையெழுத்து என்பது ஒரு நபரின் ஆளுமையை பிரதிபலிக்கும் கலை. நல்ல கையெழுத்து என்பது ஒழுக்கம் மற்றும் ஒரு மனிதனின் அடையாளமாக எப்போதும் இருந்தது. இந்த நிலையில் உலகின் அழகான கையெழுத்தை கண்டுள்ளீர்களா? ஆம், இந்த நபருக்கே ‘உலகின் மிக அழகான கைஎழுத்து’ என்று அழைக்கப்படுகிறது. இவர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து அல்ல… நேபாளத்தை சேர்ந்தவர்
நேபாள நாட்டை சேர்ந்த ப்ரகிருதி மல்லா (Prakriti Malla) தனது அதிசயமான கையெழுத்து திறமையால் உலகளாவிய கவனம் பெற்றவர். “உலகின் அழகான கையெழுத்து என பலமுறை பாராட்டப்பட்டவர். இவர் முதன்முதலில் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது 16 வயதில், எட்டாவது வகுப்பில் எழுதிய ஒரு தேர்வின் பேப்பர் வைரலானபோது. அதில் இருந்த கையெழுத்து மிகவும் அழகாகவும், தனித்துவமாகவும் இருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) தூதரகம், இவருக்கு, உலகின் சிறந்த கையெழுத்துக்கான விருதை அளித்து கெளரவித்தது. UAE-யின் 51வது ‘Spirit of the Union’ தினத்தையொட்டி UAE தலைமை இவருடைய கையெழுத்தில் மக்களுக்கு ஒரு வாழ்த்து கடிதத்தை எழுத வைத்து அதனை எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தது. இவரது வித்தியாசமான கையெழுத்தை மதித்து, நேபாள இராணுவத்தாலும் கவுரவிக்கப்பட்டார்.
“ப்ரகிருதி மல்லா எழுதிய வாழ்த்து கடிதம், உலகின் மிக அழகான கைஎழுத்தாக கருதப்படுகிறது. UAE அதிபர் ஹிசு ஹைனஸ் ஷெய்க் முகம்மது பின் ஸாயித் அல் நஹ்யான் தலைமையின் கீழ் இவருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.