தினமும் ஸ்வீட் சாப்பிட்டும்.. 15 மாசத்துல 11 கிலோ குறைஞ்ச பெண்.. சீக்ரெட் தெரிஞ்சு மிரண்டு போன நெட்டிசன்கள்..

By Ajith V

Published:

இன்று உலக அளவில் மக்கள் அனைவரும் தங்கள் வேலைகளில் மிக அதிகமாக ஈடுபட்டு வருவதால் தங்கள் உடல் நலத்தையும், மனநலத்தையும் பார்த்துக் கொள்வதற்கான நேரம் அவர்களுக்கு அமைவதே கிடையாது. வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்திற்கு மத்தியில் அவர்களும் ஓடிக் கொண்டிருப்பதால் உணவு உள்ளிட்ட எந்த விஷயத்திலும் அக்கறை காட்டுவதும் கிடையாது.

அப்படி இருக்கும்போது நோய்களும் வந்து விடும் என்பதால் முடிந்த அளவுக்கு தங்கள் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன் ஆரோக்கியமான உணவுகளை உண்டு வாழ்நாளை நீட்டிப்பதற்கான வழிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். பலரும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். உணவு விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என பலர் எச்சரித்து வந்தாலும் சிலரால் அதை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கும் வாய்ப்புண்டு.

உடல்நலம் ரொம்ப முக்கியம்..

அப்படி உணவை சரியாக கட்டுப்படுத்தவில்லை என்றால் உடல் நலத்தையும் சரியாக பார்க்க முடியாது என பலரும் குறிப்பிடுவார்கள். ஆனால் பெண் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தினந்தோறும் இனிப்புகள் அல்லது தின்பண்டங்களை சாப்பிட்டும் 11 கிலோ உடல் எடையை குறைத்துள்ள தகவல் பலரையும் ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இஸபெல்லா மோரிஸ் (Isabelle Morris ) என்ற பெண் ஒருவர் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். இவர் கடந்த 15 மாதங்களில் தினந்தோறும் டெசர்ட் வகைகளை தவறாமல் சாப்பிட்டும் 11 கிலோ மேல் உடல் எடையை குறைத்துள்ளார். இந்த ரகசியம் என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு உண்மையில் இது தொடர்பான வீடியோவையும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

மேலும் இசபெல்லா குறிப்பிட்ட கேப்ஷனில் ஆறு முதல் எட்டு மாதங்கள் உடல் எடையை குறைப்பதற்கான வேலைகளை கவனித்ததாகவும், அடுத்த ஆறு மாதங்கள் உடலை அப்படியே பராமரிப்பதற்கான வழிகளில் முயற்சி செய்ததாகவும், கடைசி நான்கு மாதங்கள் மீண்டும் உடல் எடையை குறைப்பதற்கான காலகட்டமாகவும் பிரித்து அதற்கேற்ப தனது உணவு வகைகளையும், உடல் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

11 கிலோ குறைந்த ரகசியம்

அது மட்டும் இல்லாமல் தினந்தோறும் இனிப்பு வகைகளை உண்ணும் இசபெல்லா மோரிஸ், வெளியே சென்று உணவகங்களிலும் கலோரி இருக்கும் உணவை அதிகம் உண்டு வந்துள்ளார். அதில் எந்த கட்டுப்பாடையும் விதிக்காமல் இருந்த போதும் மற்ற பல விஷயங்களில் சரியாக உடற்பயிற்சியை மேற்கொண்டு இப்படி ஒரு விஷயத்தை அவர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பலருக்கும் உணவில் கட்டுக்கோப்பாக இருக்கவில்லை என்றால் உடல் எடை அதிகரித்து விடும் என்ற பயம் இருக்கும். இதற்காகவே அவர்களுக்கு விருப்பப்பட்ட உணவு வகைகளை வேண்டுமென்றே தவிர்த்து உடல் எடையில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் விருப்பப்பட்ட உணவையும் உண்டு அதற்கேற்ப உடற்பயிற்சியையும் செய்து உடல் எடையை குறைத்துள்ள இந்த பெண்ணை அனைவரும் வியந்து பார்த்து வருகின்றனர்.